Saturday, 15 May 2010

படித்ததில் பிடித்தது...




தேடிச்சோறும் நிதம்தின்று - பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி மனம்
வாடித்துன்பம் மிகவுழன்று - பிறர்
வாடப்பல செயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்திக்கொடுங்
கூற்றுக்கு இரையெனப் பின்மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ?

-- மஹாகவி பாரதி

Friday, 14 May 2010

படித்ததில் பிடித்தது... - குறிஞ்சி மலர்


தீயினுள் தென்றல்நீ பூவினுள் நாற்றம்நீ
கல்லினுள் மணிநீ சொல்லினுள் வாய்மைநீ
அரத்தினுள் அன்புநீ மறத்தினுள் மைந்துநீ
அனைத்தும் நீ அனைத்தின் உட்பொருளும் நீ --- பரிபாடல்



குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி அவர்கள் எழுதிய அமர காவியத்தில், நான் படித்த பாடல்களிலிருந்து சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்